உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருமகளை சுட்ட மாமனாரை பிடிக்க தனிப்படை அமைப்பு

மருமகளை சுட்ட மாமனாரை பிடிக்க தனிப்படை அமைப்பு

வாழப்பாடி, வாழப்பாடி, தேக்கல்பட்டி ஏரிக்கரையை சேர்ந்த விவசாயி குப்புசாமி, 55. இவரது மனைவி லட்சுமி, 52. இவர்களது மகன் சுரேஷ், 29. இவரது மனைவி அனிதா, 25. இவர்களது, 2 வயது குழந்தை சர்வ புத்திரன்.நேற்று முன்தினம் குப்புசாமி, லட்சுமி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது குப்புசாமியை தடுக்க, அனிதா முயன்றார். இதில் ஆத்திரமடைந்த குப்புசாமி, நாட்டு துப்பாக்கியால் சுட, அனிதா, சர்வபுத்திரன் காயம் அடைந்தனர். பின் குப்புசாமி துப்பாக்கியுடன் தலைமறைவானார். வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் குப்புசாமியை பிடிக்க, வாழப்பாடி டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில், வாழப்பாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், எஸ்.ஐ., வெங்கடாசலம், ஆத்துார் எஸ்.எஸ்.ஐ., தாதன் என, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி