உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீபாவளியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

தீபாவளியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

சேலம், தீபாவளி பண்டிகையையொட்டி, கோவில்களில் சிறப்பு அலங்காரங்களுடன் நடந்த பூஜையில், ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்.சேலம் ராஜகணபதி கோவில் மூலவர் விநாயகருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு மங்கல பொருட்களால் அபி ேஷகம் செய்து, சிறப்பு முத்தங்கி அணிவித்து மகா தீபாராதனையுடன் பூஜை செய்யப்பட்டது. ஏராளமானோர் குடும்பத்துடன் புத்தாடை அணிந்து ராஜகணபதியை தரிசனம் செய்தனர்.இதே போல், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதருக்கு, சிறப்பு திருமஞ்சனம் செய்து தங்க கவசம் அணிவித்து பூஜை நடத்தப்பட்டது. மேலும் தனித்தனி சன்னதிகளில் தெய்வங்களுக்கும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சுகவனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட நகரின் அனைத்து கோவில்களிலும், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை