உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் வழியே வாரணாசிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

சேலம் வழியே வாரணாசிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

சேலம்: உ.பி.,யில் மகா கும்பமேளாவை முன்னிட்டு, கோவை, சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மங்க-ளூரு - வாரணாசி சிறப்பு ரயில், ஜன., 18, பிப்., 15 ஆகிய சனி அதிகாலை, 4:15க்கு புறப்பட்டு கண்ணுார், கோழிக்கோடு, பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்-பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியே திங்கள் மதியம், 2:50க்கு வாரணாசியை அடையும்.மறுமார்க்க ரயில், ஜன., 21, பிப்., 18 ஆகிய செவ்வாய் மாலை, 6:20க்கு கிளம்பி, வெள்ளி அதிகாலை, 2:30க்கு மங்களூருவை அடையும். இந்த ரயிலில் ஒரு, 'ஏசி' இரண்டாம் வகுப்பு பெட்டி, 3 'ஏசி' மூன்றாம் வகுப்பு பெட்டி, 12 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை