உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குருப்பெயர்ச்சியால் சிறப்பு யாக பூஜை: பக்தர்கள் வழிபாடு

குருப்பெயர்ச்சியால் சிறப்பு யாக பூஜை: பக்தர்கள் வழிபாடு

சேலம்,: நவக்கிரகங்களில் ஒன்றான குரு பகவான், நேற்று, ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதை ஒட்டி சேலம், குகை லைன் ரோட்டில் உள்ள அம்பலவாணர் சுவாமி கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில், குரு பெயர்ச்சி, சிறப்பு யாக பூஜை நடந்தது. அதில் ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தனர். சிவாச்சாரியர்கள், பல்-வேறு மூலிகைகளால் மகா யாகம் நடத்தினர். பூர்ணாஹூதி வைபவத்துக்கு பின் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து தட்சிணாமூர்த்தி பகவானுக்கு பால், இளநீர், பஞ்சா-மிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் சீல-நாயக்கன்பட்டி தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு அபி ேஷகம் செய்து தங்க கவசம் சாற்றப்பட்டது. குரு பகவா-னுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் குருபகவானை தரிசனம் செய்-தனர். அதேபோல் சேலம் சுகவனேஸ்வரர், பேர்லண்ட்ஸ் முருகன் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன், முருகன், தட்சிணாமூர்த்தி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.ஆத்துார் கைலாசநாதர் கோவில் தென்புறத்தில் உள்ள குரு பகவான், நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு, பல்வேறு அபி ேஷக பூஜைகள் செய்யப்பட்டன. சங்ககிரி சோமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி முன் யாகம் நடந்தது. 108 திவ்ய பரிகார ஹோமம்ஓமலுார் செவ்வாய் சந்தை அருகே காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆன்மிக வழிபாடு மன்றம் சார்பில், 108 திவ்ய பரிகார ஹோமம் நடந்தது. முன்னதாக சகஸ்ர நாம அர்ச்சனை, 108 திவ்ய பரிகார மந்திரங்கள் ஓதப்பட்டன. தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. ஓமலுார் கடை வீதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி யாகவேள்வி, நவக்கிரஹ ஹோமங்கள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி