உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் புனித மிக்கேல் சர்ச் தேர் பவனி

சேலத்தில் புனித மிக்கேல் சர்ச் தேர் பவனி

சேலம்: சேலம் அழகாபுரம், புனித மிக்கேல் சர்ச் தேர் திருவிழா, கடந்த 28ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினசரி மாலையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசிர்வாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விழா நிறைவாக, நேற்று தேர் பவனி நடந்தது. காலை, 8:00 மணிக்கு சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலை, 5:30 மணிக்கு மறை மாவட்ட முதன்மை குரு அழகுசெல்வன் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடந்தன. தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு தேர் மந்திரிப்பு மற்றும் தேர் பவனி நடந்தது. அருட்தந்தை பீட்டர் சூசைராஜ் தேர்பவனியை தொடங்கி வைத்தார். அலங்கரிக்கப்பட்ட தேரில், இருதய ஆண்டவர், புனித ஆரோக்கிய அன்னை மற்றும் முதன்மை வானதுாதர் புனித மிக்கேல் ஆகியோரின் திரு உருவம் எழுந்தருள செய்து, சோனா நகர், பாத்திமா நகர் வழியாக வலம் வந்த தேர்பவனி, நிறைவாக சர்ச் வந்தடைந்தது. அருட்தந்தை கள் சார்லஸ், ஜான் கென்னடி, சகாயராஜ், பிரபு, கிேஷார், டேவிட், ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி பங்கு தந்தை பிஜூ, ஒருங்கிணைப்பாளர் ஜெரோம், ஆலன் மற்றும் பேரவை உறுப்பினர்கள் பலர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை