மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
06-Jul-2025
சேலம், சேலம் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், நாளை இரண்டாவது நாளில் 6 இடங்களில் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு தொடங்கி, மதியம், 3:00 மணி வரை முகாம் நடக்கிறது. சன்னியாசிகுண்டு ஊராட்சிக்கு, சென்னை பிரதான சாலை, பாலாஜி மஹாலில் நடக்கிறது. இடங்கணசாலை நகராட்சி, 1,2 வார்டுக்கு இடங்கணசாலை நகராட்சி மண்டபம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில், 3,4,5 மற்றும் 10 முதல் 13வது வார்டு வரையிலான மக்களுக்கு, ஆட்டையாம்பட்டி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடக்கிறது.பனமரத்துப்பட்டி ஒன்றியம், அம்மாபாளையம், சந்தியூர், பாரப்பட்டி ஊராட்சிக்கு பாரப்பட்டி மாரியம்மன் கோவில் வளாகம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், ஆலடிப்பட்டி ஊராட்சிக்கு ஆலடிப்பட்டி மாரியம்மன் கோவில் மைதானம் அருகில், வாழப்பாடி ஒன்றியத்தில், சிங்கிபுரம், பொன்னராம்பட்டி ஊராட்சிக்கு பழனியாபுரம், சிங்கி புரம் சமுதாயக்கூடத்தில் தனித்தனியே நடக்கிறது என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
06-Jul-2025