உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மாவட்டத்தில் 15 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் 15 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிப்பு

சேலம், சேலம் மாவட்டத்தில், 15 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.மறைந்த, முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று, தேசிய, மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, இரு அரசுகள் சார்பில், தனித்தனியே விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுவர். அதன்படி சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில், 15 ஆசிரியர்கள், மாநில விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, சென்னையில் நாளை நடக்க உள்ள ஆசிரியர் தினவிழாவில் விருதுகள் வழங்கப்படும். விருது பெற தேர்வான ஆசிரியர்கள் விபரம்: தலைமை ஆசிரியர்கள்: கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மதிவாணன்; சேலம் காமராஜர் காலனி அரசு உயர்நிலைப்பள்ளி ஷீலாதேவி; அயோத்தியாப்பட்டணம் அருகே, பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தென்னரசன்; கொங்கணாபுரம் அருகே சித்திரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஜெயக்குமார்; கோவலன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காவேரி; மகுடஞ்சாவடி அருகே கே.கே.நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வையாபுரி.பட்டதாரி ஆசிரியர்கள்: இடைப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி கமலக்கண்ணன்; மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருள்மொழி.முதுகலை ஆசிரியர்கள்: ஆத்துார் அருகே மல்லியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி பாபு; மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சந்தோஷ்குமார்; ஓமலுார் அருகே வெள்ளாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருள்மணி; ஏற்காடு, மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி ராபர்ட் பெல்லார்மின்; இடைநிலை ஆசிரியர்கள்: கொங்கணாபுரம் அருகே ரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முனியசாமி; பெத்தநாயக்கன்பாளையம், தமையனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிவக்குமார். இதுதவிர, மேச்சேரி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வனிதா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி