உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வசிஷ்ட நதியில் காவிரி உபரிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

வசிஷ்ட நதியில் காவிரி உபரிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

ஆத்துார்: ஆத்துார் நகர பொங்கல் விழா கழகம் சார்பில், 50ம் ஆண்டு பொங்கல் விழாவையொட்டி பட்டிமன்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் பல்வேறு நதிகளை இணைப்பதற்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, அப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. இடையில் இத்திட்டம் தடைபட்டபோதும், விவசாயிகளுக்கான திட்டம் என்பதால் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆத்துார் வழியே செல்லும் வசிஷ்ட நதியில் காவிரி உபரி நீர் கொண்டு வரும் திட்டம் குறித்து, முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்துரைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ