உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி, ஆடு பலி

தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி, ஆடு பலி

ஆத்துார்,சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சியை சேர்ந்த விவசாயி தண்டபாணி, 40. இவரது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் இரவு, ஆடு, மாடுகளை கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். நேற்று காலை பார்த்தபோது, ஒரு கன்றுக்குட்டி, ஒரு ஆடு ஆகியவை, குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்தது. தெரு நாய்கள் கடித்து குதறியதில் பலியானது தெரியவந்தது. கால்நடை மருத்துவ குழுவினர், இறந்த ஆடு, கன்றுக்குட்டியை பிரேத சோதனை செய்தனர். இதனால் அதிகளவில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை