ஆட்டோ ஸ்டாண்டுக்கு இடம் கேட்டு ஸ்டிரைக்
சங்ககிரி: சங்ககிரியில் பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டடம், 2 ஆண்டுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. அங்குள்ள காலி இடத்தில் அனைத்து பஸ்களும் வந்து செல்லும்படி பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும்; ஆட்டோ ஸ்டாண்ட் ஏற்படுத்த இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, சங்ககிரி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தலைவர் மாதேஷ் தலைமையில், ஆட்டோ உரிமையாளர்கள், டிரைவர்கள், நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோக்கள் ஓடாததால், மக்கள் அவதிப்பட்டனர்.