மேலும் செய்திகள்
நேற்றைய போக்சோ
20-Feb-2025
பெண்கள் பலாத்கார வழக்கில் சிக்கியவர்கள் பட்டியல்
20-Feb-2025
கிங்ஸ்டன் - டிரைலர்
01-Mar-2025
ஆத்துார்: சேலம் மாவட்டம் தலைவாசல், சிறுவாச்சூரை சேர்ந்த, 17 வயது சிறுமி, பிளஸ் 2 படிக்கிறார். இன்று பொதுத்தேர்வு எழுத இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, மாயமானார். ராசிபுரத்தை சேர்ந்த ஒருவருடன் பழகிய நிலையில், அவரால் காரில் கடத்தி செல்லப்பட்டது பெற்றோருக்கு தெரிந்தது. பெற்றோர் தேடிய நிலையில், சேலம் அருகே தாசநாயக்கன்பட்டியில் இருப்பது அறிந்து அங்கு சென்றனர். அப்போது மகளுடன் சிலர் இருந்துள்ளனர். மகளை விட்டுவிடும்படி பெற்றோர் கேட்டனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், மல்லுார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே கும்பல் காரில் மாணவியை ஏற்றி தப்பிச்சென்றது. மல்லுார் போலீசார், மாணவியின் பெற்றோரை சமாதானப்படுத்தி, தலைவாசலுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற பெற்றோர், 'ராசிபுரத்தை சேர்ந்த நவீன்குமார் உள்ளிட்ட சிலர், என் மகளை கடத்தி சென்றதால் பாதுகாப்பாக மீட்டுத்தர வேண்டும்' என, புகார் அளித்தனர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மாணவியை தேடும் பணி தொடங்கியது.
20-Feb-2025
20-Feb-2025
01-Mar-2025