உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 முறை நீட் தேர்வு எழுதிய மாணவன் பயத்தில் தற்கொலை

3 முறை நீட் தேர்வு எழுதிய மாணவன் பயத்தில் தற்கொலை

சேலம்:மூன்று முறை 'நீட்' தேர்வு எழுதிய மாணவன், தோல்வி பயத்தால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சேலம், நரசோதிப்பட்டியை சேர்ந்த ரஞ்சன் - யோகலட்சுமி. தம்பதியின் மகன் கவுதம், 20; இவர், 2023ல் பிளஸ் 2 முடித்தவுடன் நீட் தேர்வு எழுதினார். தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து இரண்டாவது முறையாக எழுதி தோல்வியை சந்தித்தார்.மிகுந்த மன வேதனையில் இருந்த கவுதமுக்கு, அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. கவுதம் சில நாட்களுக்கு முன் நடந்த, நீட் தேர்வில் பங்கேற்றார். நேற்று முன்தினம் மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சூரமங்கலம் போலீசார், கவுதம் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், கவுதம் ஏற்கனவே மூன்று முறை தற்கொலைக்கு முயன்றதும், பெற்றோர் அவரை காப்பாற்றியதும் தெரியவந்துள்ளது. நீட் தேர்வு தோல்வி பயத்தால், அவர் துாக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை