உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

மாணவிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளியை சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் கல்லுாரியில் முதலாண்டு நர்சிங் படிக்கிறார். இவருக்கும் தம்மம்பட்டியை சேர்ந்த வாலிபருக்கும், திருமணம் செய்வதற்கான ஏற்பாடு நடந்தது. இதுகுறித்து சேலம் குழந்தைகள் நல குழுமத்துக்கு புகார் சென்ற நிலையில், அதன் அலுவலர்கள், மாணவியின் பெற்றோரிடம் விசாரித்து, திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து மாணவியை மீட்டு, சேலம் குழந்தைகள் காப்பகத்-துக்கு அழைத்துச்சென்றனர். இதுதொடர்பாக தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை