உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுத்தம் செய்த மாணவர்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுத்தம் செய்த மாணவர்கள்

சேலம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஏற்காடு அடிவாரம் பகுதியில் நேற்று நடந்தது.சேலம் ஏற்காடு அடிவாரத்தில் நேற்று, ஈகோ ப்ரீக் என்ற மாணவர் அமைப்பின் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்-தது. மேயர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பங்கேற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றுக்-கொண்டு, ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவு-களை அகற்றினர். மலைப்பகுதியில், விதை பந்துகளும் வீசப்பட்-டன. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ