மேலும் செய்திகள்
தேசிய அஞ்சல் வார கொண்டாட்டம்
07-Oct-2024
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை பஜார், மரக்கடை சந்தில் உள்ள துணை அஞ்சலகத்தில், மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை நடக்கிறது. இந்நிலையில் அந்த அஞ்சலகம் நேற்றுடன் மூடப்பட்டது. நாளை முதல், செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட்டில் உள்ள துணை அஞ்சலகத்தின் ஒரு பகுதியில் தனியே செயல்பட உள்ளது.ஆனால் முன் அறிவிப்பு இன்றி அஞ்சலகம் மூடப்படுவது வாடிக்கையாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இனி அவர்கள் அஞ்சல் சேவையை பெற, அரை கி.மீ., கடந்து சென்று லாரி மார்க்கெட் துணை அஞ்சலகத்துக்கு செல்ல வேண்டும்.இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை பஜார் அஞ்சல் அதிகாரி பர-மேஸ்வரன் கூறுகையில், ''கட்டட உரிமையாளர் கொடுத்த நெருக்கடியால், சொந்த கட்டடத்தில் இயங்கும் துணை அஞ்சல-கத்தின் ஒரு பகுதியில் தனியே செயல்படும். இதற்கு வாடிக்கை-யாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.
07-Oct-2024