உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 24 மணி நேர தர்ணா போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 24 மணி நேர தர்ணா போராட்டம்

சேலம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கை-களை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று, 24 மணி நேர தர்ணா போராட்டம் நடத்தினர்.தமிழக முதல்வர் மவுனம் களைந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி நடந்த தர்ணா போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் திருவேரங்கன் தலைமை வகித்தார். மாநில துணைத்த-லைவர் செல்வராணி, தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், ''முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டி, அழுத்தம் கொடுக்கவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்-டுள்ளோம். தொடர்ந்து, ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பின் முடி-வின்படி, வரும், 14ல், வட்ட தலைநகர் பகுதிகளில் மாலைநேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். மாவட்ட தலைநகரில், 25ல், மறியல் போராட்டம், மார்ச், 19ல், ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம். அதன்பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்,'' என்றார்.மாவட்ட செயலர் சுரேஷ், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !