உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கவர்னரை திரும்ப பெறாவிட்டால் தமிழகம் கொந்தளிக்கும்

கவர்னரை திரும்ப பெறாவிட்டால் தமிழகம் கொந்தளிக்கும்

சேலம்: தமிழக கவர்னர் அத்துமீறுவதாக கூறி, சேலம் ஸ்டேட் வங்கி முன், ஒருங்கிணைந்த தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, சேலம் எம்.பி., செல்வகணபதி பேசியதாவது: சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின் தேசிய கீதம் இசைப்பது மரபு. அதை மாற்ற முயற்சிப்பதை ஏற்க முடியாது. அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும்படி கவர்னர் வரம்பு மீறி செயல்படுகிறார். மத்திய அரசு, தமிழகத்தை ஒரு அங்கமாகவே பார்க்கவில்லை. ஜி.எஸ்.டி., வரி பாக்கி, 20,000 கோடி ரூபாய். பள்ளி கல்வித்துறைக்கு, 2,000 கோடி ரூபாய் பாக்கி. புது ரயில்வே திட்டங்கள் தமிழகத்துக்கு இல்லை. 100 நாள் வேலை திட்டத்துக்கும் நிதி ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறது. முன்னாள் முதல்வர், இ.பி.எஸ்.,சும், பா.ஜ.,வும் ஒன்றுதான். மத்திய அரசு, உடனே கவர்னரை திரும்ப பெறாவிட்டால் தமிழகம் கொந்தளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், கவர்னர், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப, அதை கட்சியினர் திரும்ப சொல்லி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மத்திய மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் தாமரைக்கண்ணன், ராஜேந்திரன், மணி, மாவட்ட துணை செயலர் குமாரவேல், மாநகர் செயலர் ரகுபதி, அவைத்தலைவர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ