மாணவிக்கு தொல்லை தற்காலிக ஆசிரியர் கைது
இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி, இருப்பாளி அரசு உயர்நிலைப்-பள்ளியில், பள்ளி மேலாண் குழு மூலம் தற்காலிக தமிழ் ஆசிரிய-ராக பிரகதீஸ்வரன், 39, பணியாற்றினார். நேற்று முன்தினம் சிறப்பு வகுப்பை நடத்தியவர், ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவியின் பெற்றோர் புகார்படி, சங்ககிரி மகளிர் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, பிரகதீஸ்வரனை நேற்று கைது செய்-தனர்.