உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பனியன் ஆலையில் பயங்கர தீ விபத்து இயந்திரம் உள்பட ரூ.1 கோடிக்கு சேதம்

பனியன் ஆலையில் பயங்கர தீ விபத்து இயந்திரம் உள்பட ரூ.1 கோடிக்கு சேதம்

பனியன் ஆலையில் பயங்கர தீ விபத்துஇயந்திரம் உள்பட ரூ.1 கோடிக்கு சேதம்சேலம், நவ. 1-பட்டாசு வெடித்து சிதறி பனியன் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பனியன், இயந்திரங்கள் எரிந்து நாசமாகின. சேலம், தாதகாப்பட்டி, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன், 43. இவர் தாதகாப்பட்டி, ஸ்ரீரங்கம் புது தெருவில் பனியன் ஆலை நடத்துகிறார். அங்கு, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தீபாவளியால் கடந்த, 30 மாலை, ஆலையை பூட்டிச்சென்றனர். இந்நிலையில் நேற்று மாலை, 6:30 மணிக்கு ஆலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து பயங்கர தீயாக மாறி மளமளவென பற்றி எரியத்தொடங்கியது. ஆலை பூட்டி இருந்ததால், மேல் தளத்துக்கும் தீ பரவியது. அப்பகுதியில் இருந்தவர்கள், அதை பார்த்து அன்னதானப்பட்டி போலீசார், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.மாவட்ட அலுவலர் மகாலிங்க மூர்த்தி, உதவி அலுவலர் சிவகுமார் உள்பட, 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம், பணி நடந்தது. தவிர, அருகே ஒரு வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பனியன் ஆலை அருகே அப்பகுதியை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்ததில் அதன் தீப்பொறி ஆலைக்குள் விழுந்து தீப்பற்றியது தெரிந்தது. இரு தளங்களில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் பொருட்கள், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் இயந்திரங்கள் என, ஒரு கோடி ரூபாய் சேதம் இருக்கும் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை