மேலும் செய்திகள்
தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி
15-Sep-2025
ஆத்துார், ஆத்துார், கடை வீதியை சேர்ந்தவர் ராஜா, 65. அதே பகுதியில் ஜவுளி கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு, ஜவுளிக்கடையில் வேலையை முடித்துவிட்டு, 'ஸ்கூட்டி பெப்' மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். மொபட்டை, ராஜா மகன் அபிேஷக், 25, ஓட்டினார். கடைவீதி சாலையில் சென்றபோது, அங்கிருந்த பள்ளத்தால், அபிேஷக் திடீரென, 'பிரேக்' போட, அப்போது ராஜா தடுமாறி விழுந்தார்.படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Sep-2025