மேலும் செய்திகள்
விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்
08-Dec-2024
பெத்தநாயக்கன்பாளையம், டிச. 19-பெத்தநாயக்கன்பாளையம், படையாச்சியூரை சேர்ந்த அருணகிரி மனைவி தனம், 65. லேசாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், அதே பகுதியில் உள்ள அவரது மகள் கலா வீட்டில் தங்கியிருந்தார். கடந்த, 14 இரவு, வீட்டில் துாங்கிய தனத்தை, மறுநாள் காலை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், கலா நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் ஏத்தாப்பூர் அண்ணா நகர், வசிஷ்ட நதி அருகே உள்ள கால்வாயில் நேற்று மிதந்த உடலை, ஆத்துார் தீயணைப்பு துறையினர் மீட்டனர். போலீஸ் விசாரணையில் அது மாயமான தனம் என தெரிந்தது. அவர் இறப்பு குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
08-Dec-2024