ஏற்காட்டில் பஞ்சராகி நின்ற பஸ் மலைக்கிராம மக்கள் பரிதவிப்பு
ஏற்காட்டில் பஞ்சராகி நின்ற பஸ்மலைக்கிராம மக்கள் பரிதவிப்புஏற்காடு, அக். 23-சேலம், புது பஸ் ஸ்டாண்டில் பயணியரை ஏற்றிக்கொண்டு, நேற்று மதியம். 3:50 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. 5:10க்கு ஏற்காடு வந்த பஸ், மாலை, 5:25க்கு சேலத்துக்கு புறப்பட வேண்டிய நிலையில் பஞ்சரானது. டிரைவர் கோவிந்தராஜ், கண்டக்டர் கண்ணன், பஸ் ஸ்டாண்டில் பயணியரை இறக்கிவிட்டு, பஞ்சரான வீலை மாற்ற முயன்றனர். 'போல்ட்'டை கழற்ற முடியவில்லை. இதனால் செங்காடு, கீரைக்காடு, வாழவந்தி, கொட்டச்சேடு மலைக்கிராமங்களுக்கு செல்ல வேண்டிய மக்கள், பள்ளி குழந்தைகள் சிரமத்துக்கு ஆளாகினர். பின், 6:35 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் வந்த மற்றொரு அரசு பஸ்சை மலைக்கிராமங்களுக்கு செல்ல மாற்றி விட்டனர். இதனால், ஒரு மணி நேரத்துக்கு பின், பள்ளி குழந்தைகள், மக்கள் பயணித்தனர்.விபரீத பயணம்அதேநேரம் பஞ்சரான பஸ்சை, சேலம் பணிமனைக்கு கொண்டு செல்லவேண்டி இருந்ததால் காற்றை நிரப்பிக்கொண்டு, 20க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றி புறப்பட்டது. மலைப்பாதையில் அசம்பாவிதத்துக்கு வழிவகுக்கும் என்ற அச்சமின்றி ஓட்டிச்சென்றனர். பின், 60 அடி பாலம் அருகே சென்றபோது, காற்று குறைந்ததால் அங்கேயே பஸ்சை நிறுத்திவிட்டனர். தொடர்ந்து பஸ்சில் இருந்த பயணியர் இறங்கி, சாலையில் காத்திருந்து அடுத்து வந்த தனியார் பஸ்சில் ஏறி சேலம் சென்றனர்.