உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலதிபரின் வீட்டில் ஓய்வு எடுத்த முதல்வர்

தொழிலதிபரின் வீட்டில் ஓய்வு எடுத்த முதல்வர்

பெ.நா.பாளையம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில், தி.மு.க., இளைஞர் அணி மாநில மாநாடு இன்று நடக்கிறது. இதில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். இதனால் நேற்று முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்தார்.அவர் இரவு தங்கி ஓய்வு எடுக்க வசதியாக, வாழப்பாடியை சேர்ந்த பழனிசாமி, 60, என்பவரின் சொகுசு வீடு தேர்வு செய்யப்பட்டது. அங்கிருந்த பழனிசாமி, 3 மாதங்களுக்கு முன், வேறு இடத்தில் தங்கிக்கொண்டார். தொடர்ந்து முதல்வர் ஓய்வு எடுக்கும் அறைகளில் ேஷாபா, 'ஏசி' உள்ளிட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டன. வெளிப்புற பகுதிகளில் பூந்தொட்டிகள், வீடு முழுதும் வண்ணம் பூசப்பட்டது. அந்த வீட்டுக்கு செல்லும் பாதை, அப்பகுதி முழுதும், 45 லட்சம் ரூபாயில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு அந்த வீட்டுக்கு வந்து, முதல்வர் ஸ்டாலின் ஓய்வு எடுத்தார்.காரணம் என்ன?பழனிசாமி, ரியல் எஸ்டேட் தொழில் செய்வதோடு காளியம்மன் கோவில் தர்மகர்த்தாவாகவும், அரசியல் கட்சியை சாராதவராகவும் உள்ளார். வாழப்பாடியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவருக்குரிய, 1 ஏக்கரில், 5,000 சதுரடிக்கு மேல் வீட்டை, நீச்சல் குள வசதியுடன் கட்டியுள்ளார். இந்த வீடு தனியாகவும், 200 மீ.,ல் எந்த குடியிருப்பும் இல்லாததால், பாதுகாப்பாக இருக்கும் என்பதால், அமைச்சர் உதயநிதி வந்து பார்த்த பின், முதல்வர் ஓய்வுக்கு சரியான இடமாக இந்த வீட்டை தேர்வு செய்துள்ளனர். இங்கிருந்து மாநாடு நடக்கும் இடத்துக்கு, 20 நிமிடத்தில் செல்ல முடியும். முதல்வர் தங்கியுள்ளதால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை