மேலும் செய்திகள்
பணம் பறித்தவர் கைது
25-May-2025
சேலம் :சேலம், சூரமங்கலம் மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார், 69. ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி. இவரது மனைவி சண்முகவள்ளி இரண்டு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு தமிழழகன், 23, கிரி வெங்கடேஷ் என இரு மகன்கள் உள்ளனர். தமிழழகன் கொண்டலாம்பட்டி பகுதியில் ஆட்டோ மொபைல்ஸ் நடத்தி வருகிறார்.செல்வகுமார் இரண்டாவது திருமணத்திற்காக ஏற்பாடுகள் செய்து வந்தார். இதற்கு மகன்களுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகன்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், தந்தையிடம் பணம் கேட்டும், திருமணம் பற்றியும் பேசும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், செல்வகுமார் வீட்டில் இருந்த ஸ்பேனரை எடுத்து மகன் தமிழழகனை தாக்கியுள்ளார். இதையடுத்து தமிழழகனும் தந்தையை சரமாரியாக தாக்கி, வீட்டில் இருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் செல்வகுமாரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11:30 மணிக்கு உயிரிழந்தார்.சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில், தந்தை இரண்டாவது திருமணம் செய்வது சம்பந்தமாகவும், பணம் கேட்டதால் வந்த தகராறில் மகன் தாக்கியதில் செல்வகுமார் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக மாற்றி, தமிழழகனை நேற்று போலீசார் கைது செய்தனர்.
25-May-2025