உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கழுத்தை அறுத்துக்கொண்ட குடிமகன்

கழுத்தை அறுத்துக்கொண்ட குடிமகன்

சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்டில் நேற்று இரு வாலிபர்கள் ரக-ளையில் ஈடுபட்டனர். போலீசார் இருவரையும், பள்ளப்பட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அதில் ஒருவர், 'போதை'யில் இருந்துள்ளார். விசாரித்துக்கொண்டிருக்கும்போதே அவர், பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனே, '108' அவசரகால ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதல்கட்ட விசாரணையில் அவர், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பதும், போதைப்பொருட்கள் வழக்கில் பலமுறை சிக்கி எச்ச-ரிக்கப்பட்ட நிலையில், சேலம் வந்த அவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. தொடர்ந்து பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !