தை மாத முதல் பிரதோஷம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வீரபாண்டி: தை மாதத்தின் முதல் பிரதோஷம், சோமவார பிரதோஷமாக அமைந்ததால், சிவாலயங்களில் நடந்த சிறப்பு பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையில் வந்த சோமவார பிரதோஷத்தையொட்டி, மூலவர் கரபுரநாதர், பெரியநாயகி அம்மனுக்கு நேற்று காலை பால், தயிர், இளநீர் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபி ேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை ரிஷப வாகனத்தில், பெரியநாயகி அம்மனுடன் கரபுரநாதர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருள செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.ஆட்டையாம்பட்டி வேலநத்தம் பாவடியில், புதிதாக கட்டப்பட்டு வரும் காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோவில் மூலவர் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சோமவார பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை, 16 வகையான மங்கல பொருட்களால் அபி ேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் பூஜை செய்யப்பட்டது.* தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில் தைமாத பிரதோஷம் நேற்று நடந்தது. மகா மண்டப நந்தி பெருமானுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம் உட்பட, 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து நந்திக்கு பூக்களால் அலங்காரம் செய்து, நட்சத்திர ஆரத்தி, தீபாராதனை காட்டப்பட்டது. வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார், நாயகிக்கு, தீபாராதனை செய்து கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர்.