உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு

சேலம்: வைகுண்ட ஏகாதசியையொட்டி, சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் இன்று அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன் வழியே ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் எழுந்தருள்கிறார். தொடர்ந்து, 21 வரை, ராப்பத்து உற்சவம் நடக்கிறது. 14ல் சந்தனகாப்பு அலங்காரம், 19ல் ஆழ்வார் மோட்சம், திருவீதி புறப்பாடு, திருவாய்மொழி சாற்றுமுறை, 20ல் சொர்க்கவாசல் திருக்காப்பு நடக்க உள்ளது. அதேபோல் சேலம், ஆனந்தா இறக்கம் லட்சுமி நாராயணர், சின்னக்கடைவீதி வேணுகோபால் சுவாமி, பட்டைக்கோவில் வரதராஜர், சின்ன திருப்பதி வரதராஜர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், வரிசையாக செல்ல தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றங்களை தடுக்க ஆங்காங்கே, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோட்டை பெருமாள் கோவில் உள்பட மாநகரில், 500க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.ஆட்டையாம்பட்டி வேலநத்தம் பாவடி லட்சுமி நாராயணர் கோவிலில் நேற்று பெருமாள், மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் வழியே சர்வஅலங்காரத்தில் லட்சுமி நாராயணர் எழுந்தருள்கிறார். தொடர்ந்து, திருக்கோடி ஏற்றி பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதேபோல் காளிப்பட்டி சென்றாய பெருமாள், இளம்பிள்ளை லட்சுமி வெங்கடேச பெருமாள், உத்தமசோழபுரம் அழகிரிநாதர் கோவில்களிலும் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை