உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கலைஞர் கனவு இல்ல திட்டம் ரூ.500 கோடி ஒதுக்கியது அரசு

கலைஞர் கனவு இல்ல திட்டம் ரூ.500 கோடி ஒதுக்கியது அரசு

சென்னை: கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு, கூடுதலாக 500 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.தமிழகத்தில் நடப்பாண்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்-டுள்ளது. இதற்காக ஒரு வீட்டிற்கு, 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்-படுகிறது. இத்திட்டத்தில், இதுவரை 1,625 கோடி ரூபாய் ஒதுக்-கப்பட்டு, வீடுகளின் கட்டுமான நிலைகளுக்கு ஏற்ப, 1,350 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. சிமென்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த, தமிழக அரசு மேலும் 500 கோடி ரூபாயை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.பிரதமர் வீடு கட்டும் திட்டம்தமிழகத்தில் உள்ள தோடா, இருளர், பனியன், காட்டுநா-யக்கன், கோட்டா, குரும்பா என, ஆறு பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்ட, பிரதமரின் பெருந்திட்டத்தின் கீழ் 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 11,947 வீடுகள் கட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை, 6,559 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பயனாளி-களுக்கு மீதமுள்ள வீடுகளை வழங்க ஏற்பாடுகள் நடந்து வரு-கின்றன. இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு, 2 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீத நிதியையும் பங்களிப்பாக வழங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ