விவசாய கிணற்றில் மிதந்தவர் கொத்தனார்
இடைப்பாடி, இடைப்பாடி அருகே இருப்பாளியில் உள்ள விவசாய கிணற்றில், நேற்று முன்தினம் ஆண் சடலம் மிதந்தது. பூலாம்பட்டி போலீசார், சடலத்தை கைப்பற்றி, அவர் யார் என விசாரித்னர். அதில் இருப்பாளி, மேட்டுப்பட்டியை சேர்ந்த கொத்தனார் தினேஷ், 26, என்பதும், தினமும் மது அருந்திவிட்டு, அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்ததும், அவரது வீட்டில் சண்டை போட்டு வந்ததும் தெரிந்தது. 'போதை'யில் தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்து இறந்தாரா என விசாரணை நடப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.