உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிலம்பம் சுற்றிய மாணவர்

சிலம்பம் சுற்றிய மாணவர்

கெங்கவல்லி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலுாரை சேர்ந்த சங்கரின் மகன் சூர்யா, 20. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம், 3ம் ஆண்டு படிக்கிறார். சிலம்ப போட்டியில் மாநில அளவில் பல பரிசுகளை பெற்றுள்ளார். அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, நடுவலுாரில் கட்டைக்காலில் நின்று சிலம்பம் சுற்றும் நிகழ்வில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் காலை, 9:50 முதல் இரவு, 7:50 மணி வரை என, 10 மணி நேரம், கட்டைக்காலில் நின்று சிலம்பம் சுற்றினார். அப்போது இரு கம்புகள் வைத்தும் சுற்றி அசத்தினார். இதை, ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் செவே வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு உலக சாதனையாக பதிவு செய்து, நேற்று, சான்றிதழ் வழங்கின. மேலும் மாணவரை, மக்களும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ