ஸ்டுடியோ முன் மொபட் திருட்டு
ஓமலுார் : மேட்டூர் தாலுகா அரங்கனுார், பொம்மியம்பட்டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி மோகன், 23. நேற்று மதியம், 2:00 மணிக்கு, 'டியோ' மொபட்டை, ஓமலுார், பிருந்தாவன் தியேட்டர் எதிரே உள்ள ஸ்டுடியோ முன் நிறுத்தவிட்டு புகைப்படம் வாங்க சென்றார். திரும்பி வந்தபோது, அவரது மொபட்டை காணவில்லை. அவர் புகார்படி ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.