உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் திருடிய வீடியோ வைரல்

மொபட் திருடிய வீடியோ வைரல்

மொபட் திருடிய வீடியோ வைரல்பனமரத்துப்பட்டி, செப். 29-மல்லுார் அருகே பாலம்பட்டியை சேர்ந்த தறி பட்டறை உரிமையாளர் மாணிக்கம், 57. அவர் கடந்த, 24ல் வீடு வெளியே சாவியுடன், 'ஆக்டிவா' மொபட்டை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். மதியம், 2:15 மணிக்கு, வெளியே வந்தபோது, மொபட்டை காணவில்லை. வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தபோது, மதியம், 2:00 மணிக்கு ஒருவர் திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. அவர் புகார்படி, மல்லுார் போலீசார், திருடியவரை தேடுகின்றனர். மேலும் பட்டப்பகலில் மர்ம நபர், மொபட் திருடிய சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி