உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கதவணை நீர் வெளியேற்றம் அணை அடிவாரம் வறண்டது

கதவணை நீர் வெளியேற்றம் அணை அடிவாரம் வறண்டது

மேட்டூர், மேட்டூர் அடுத்த செக்கானுாரில் காவிரி குறுக்கே, 30 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட கதவணை மின் உற்பத்தி நிலையம் உள்ளது. கதவணையில் தேக்கப்படும், 0.45 டி.எம்.சி., நீர், மேட்டூர் அணை அடிவார காவிரியாறு வரை தேங்கி நிற்கும். கதவணை பராமரிப்பு பணிக்கு தேக்கி வைத்த நீர் முழுமையாக காவிரியின் கீழ் பகுதிக்கு வெளியேற்றப்பட்டது. இதனால் அணை அடிவாரம் காவிரியாற்றின் ஒரு பகுதியில் குடிநீருக்கு, 1,000 கனஅடி நீர் செல்லும் நிலையில், இதர பகுதிகள் வறண்டுள்ளன. பராமரிப்பு பணி முடிந்த பின் மீண்டும் காவிரியில் நீரை தேக்கி, செக்கானுார் கதவணையில் மின் உற்பத்தி தொடங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை