கணவர் 2ம் திருமணம் செய்ததால் தாயுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
கணவர் 2ம் திருமணம் செய்ததால்தாயுடன் பெண் தீக்குளிக்க முயற்சிசேலம், அக். 20-சேலம், பள்ளப்பட்டி, சின்னேரி வயக்காட்டை சேர்ந்தவர் தேவி, 45. அவரது மகள் இந்துமதி, 19. இருவரும் நேற்று மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர்.திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்கள் மீது போலீசார் தண்ணீர் ஊற்றி தடுத்து மீட்டனர்.பின் இந்துமதி கூறியதாவது: மல்லசமுத்திரத்தை சேர்ந்த கவின், சேலம், 5 ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிகிறார்.ஜவுளி கடையில் வேலை செய்யும் போது, நானும் அவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டோம். என்னுடன் ஒன்றரை மாதமாக குடும்பம் நடத்தியவர், பின் வீட்டுக்கு வருவது கிடையாது. பேசுவதும் இல்லை.சில நாட்களுக்கு முன் கணவர், வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. இதுகுறித்து கேட்டபோது என்னை அவதுாறாக பேசி விரட்டிவிட்டார்.இதுகுறித்து மல்ல சமுத்திரம், பள்ளப்பட்டி போலீசில் அடுத்தடுத்து புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.