உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உலக நன்மை வேண்டி தன்வந்திரி ஹோமம்

உலக நன்மை வேண்டி தன்வந்திரி ஹோமம்

சேலம்: உடல் ஆரோக்கியம், உலக நன்மை வேண்டி, சேலம் தன்வந்திரி ஆசிரமம் டிரஸ்ட், தேசிய சேவா சமிதி இணைந்து, 25ம் ஆண்டாக, சேலம், மரவேனி, மாதவம் அரங்கில் தன்வந்திரி மஹா ஹோமத்தை நேற்று நடத்தின. அங்கு பெருமாள், தன்வந்திரி பகவான் உற்வசங்களை எழுந்தருள செய்து, அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து கோமாதா, மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் உள்ளிட்டவைகள் நடந்தது. இதையடுத்து, சகல வியாதிகள் நீங்கி உடல் நலம் பெற வேண்டியும், உலக நன்மைக்கும், தன்வந்திரி ஹோமம் தொடங்கியது. குணசேகர பட்டாச்சாரியார் குழுவினரால் வேதங்கள் ஒத, 108 மூலிகைகளால் ஹோமம் நடந்தது. பின் பூர்ணாஹூதி வைபவம் நடந்தது. பெருமாளுக்கும், தன்வந்திரி பகவானுக்கும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை