உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேலைவாய்ப்பு இணையதளத்தில் தலைவாசல் இல்லை 5 ஆண்டாக பழைய தாலுகா பெயரில் பதிவாகும் அவலம்

வேலைவாய்ப்பு இணையதளத்தில் தலைவாசல் இல்லை 5 ஆண்டாக பழைய தாலுகா பெயரில் பதிவாகும் அவலம்

தலைவாசல், ஐந்து ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட தலைவாசல் தாலுகா, வருவாய் கிராமங்கள் குறித்த விபரம், வேலைவாய்ப்பு இணையதளத்தில் இல்லாததால், பள்ளி, கல்லுாரி முடித்தவர்கள், பழைய தாலுகா பெயர்களில் பதிவு செய்யும் அவலம் தொடர்ந்து வருகிறது.சேலம் மாவட்டத்தில் தற்போது, 14 தாலுகாக்கள் உள்ளன. 2020 - 21ல், ஆத்துார், கெங்கவல்லி தாலுகா பகுதிகளில் இருந்து, தலைவாசல் தாலுகா உருவாக்கப்பட்டது. அந்த தாலுகாவில், 3 பிர்க்கா, 35 ஊராட்சிகள், ஒரு டவுன் பஞ்சாயத்து, 43 வருவாய் கிராமங்கள் உள்ளன. அந்த தாலுகாவை சேர்ந்த, பள்ளி, கல்லுாரி முடித்த மாணவ, மாணவியர், கல்வி, தொழிற்கல்வி, கணினி பயிற்சி போன்ற சான்றுகளை, வேலைவாய்ப்பு இணையதளத்தில், ஆத்துார் மற்றும் கெங்கவல்லி தாலுகா என, பழைய தாலுகா பெயர்களை குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டியுள்ளது. தவிர வருவாய் கிராமங்கள் விபரம் இல்லாததால், ஊராட்சி பெயர்கள் மட்டும் குறிப்பிடும் நிலை உள்ளது.அதேபோல் ஆதார் இணையதளத்திலும், தலைவாசல் தாலுகா குறித்து பதிவு செய்ய முடியாத நிலை தொடர்கிறது. தலைவாசல் தாலுகா உருவாக்கி, 5 ஆண்டாகியும், வேலைவாய்ப்பு, ஆதார் இணையதளங்களில், சொந்த தாலுகா, ஊரை பதிவு செய்ய முடியாமல் பலர் பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் கூறுகையில், ''வேலைவாய்ப்பு அலுவலரிடம் கேட்டபோது, 'அப்டேட்' செய்யும் பணி நடப்பதாக கூறினர். விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி