மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் இன்று பொங்கல் வைபவம்
07-Nov-2024
தாரமங்கலம்,: தாரமங்கலம், துட்டம்பட்டி பைபாஸ், கலர்காட்டில் உள்ள கூடக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கி-றது. இதை முன்னிட்டு அருகே உள்ள உலகேஸ்வரர் கோவிலில் இருந்து, நேற்று காலை, 9:00 மணிக்கு தீர்த்தக்குட ஊர்வலம் தொடங்கியது. பம்பை, மேளதாளம் முழங்க, மகமேருவில் சுவாமி மற்றும் சுவாமி வேடம் அணிந்தவர்கள் முன்புறம் செல்ல, தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தகுடங்கள், முளைப்பாரி எடுத்து ஊர்-வலமாக, மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். மாலை, 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி செய்து முதல்கால யாக-பூஜை நடந்தது. தொடர்ந்து ஹோமங்கள், தீபாராதனை உள்ளிட்டவை செய்து கோபுரத்தில் கலசம் வைக்கப்பட்டது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை செய்து, 6:15 முதல், 7:15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
07-Nov-2024