உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தம்பதியை தாக்கிநகை பறித்தோர் கைது

தம்பதியை தாக்கிநகை பறித்தோர் கைது

சேலம்:சேலம், கிச்சிப்பாளையம், நாராயண நகரை சேர்ந்தவர் மாதவராஜ். இவரது மனைவி பிரேமா, 67. இவர்கள் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்த இருவர், தம்பதியை தாக்கிவிட்டு, 7 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்தனர். அதில் முள்ளுவாடி கேட் பகுதியை சேர்ந்த முஸ்தபா, 30, கோட்டை முகமது புறா இம்ரான், 34, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை