உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆயிரக்கணக்கானோர் தீர்த்தக்குட ஊர்வலம்

ஆயிரக்கணக்கானோர் தீர்த்தக்குட ஊர்வலம்

இடைப்பாடி: இடைப்பாடி அருகே, சித்துாரில் படவெட்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்-குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.இடைப்பாடி அருகே சித்துாரில் உள்ளது படவெட்டி அம்மன், முத்து முனியப்பன் சுவாமிகள். 18ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுமான பணிகள் நடந்து முடிந்த நிலையில், நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றுவதற்காக, நேற்று பூலாம்பட்டியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஜல்லிக்கட்டு காளை, குதிரைகளுடன் தீர்த்தக்குடங்களை எடுத்து வந்தனர்.ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தாக்கள் பழனிசாமி, சேவி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை