உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாஜி துணை கலெக்டர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது

மாஜி துணை கலெக்டர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது

பெத்தநாயக்கன்பாளையம்: சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் முன்னாள் துணை கலெக்டர் ஸ்ரீதர், 62. கடந்த, 20ல், இவருக்கு சொந்தமான இடையப்பட்டி புதுார் பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து, 'டிவி', ஏசி, டிவிடி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஏத்தாப்பூர் போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை சோதனை செய்து விசாரித்தனர்.இதில் திருட்டில் ஈடுபட்ட ஏற்காட்டை சேர்ந்த கோவிந்தராஜ், 31, செந்தில், 32, பெரியண்ணன், 35, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர். திருட பயன்படுத்தப்பட்ட டாடா சுமோ காரையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !