சேலம் கோட்டத்தில் இன்று முதல் ரயில்களின் நேரம் மாற்றம்
சேலம்: ஜனவரி 1 (இன்று) முதல், ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில், சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஸ்டேஷன்களிலிருந்து, ரயில்கள் கிளம்பும், வந்து சேரும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்ட விபரம்:ஈரோடு-ஜோலார் பேட்டை ரயில், ஈரோட்டிலிருந்து மாலை, 5:40 மணிக்கு பதில், 5:35 மணிக்கும், மேட்டுப்பாளையம்-போத்தனுார் ரயில் மதியம், 1:05 மணிக்கு பதில், 1:00 மணிக்கும், கோவை-சோரனுார் ரயில் மாலை, 4:30க்கு பதில், 4:25க்கும், கரூர்-சேலம் ரயில் இரவு, 7:55 மணிக்கு பதில், 8:05 மணிக்கும், ஈரோடு-பாலக்காடு ரயில் மாலை, 5:15 மணிக்கு பதில், 5:00 மணிக்கும், மேட்டுப்பாளையம்-துாத்துக்குடி ரயில் மாலை, 7:35க்கு பதில், 7:45க்கு கிளம்பும்.கரூர்-சேலம் ரயில் இரவு, 9:30க்கு பதில் 9:45 மணிக்கும், ராஜ்கோட்-கோவை ரயில் இரவு, 8:25 க்கு பதில், 8:50க்கும், பொள்ளாச்சி-கோவை ரயில், 8:40க்கு பதில், 9:25க்கும், திருச்சி - கரூர் ரயில், 8:30 மணிக்கு பதில், 9:10 மணிக்கும், கடலுார்-சேலம் ரயில், 9:05க்கு பதில், 9:10 மணிக்கும், சென்னை எழும்பூர்-சேலம் ரயில் காலை, 6:10 மணிக்கு பதில், 6:15க்கும், சோரனுார்-கோவை ரயில் மாலை, 5:50க்கு பதில், 5:35க்கும், சில்சார்-கோவை ரயில் மதியம், 12:00 மணிக்கு பதில், 11:55க்கும், பெங்களூரு-கோவை ரயில் இரவு, 9:00 மணிக்கு பதில், 9:05க்கும், சேலம் - கரூர் ரயில் இரவு, 7:10க்கு பதில், 7:15 க்கும் வந்து சேரும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.