உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டி.என்.பி.எல்., கிரிக்கெட் ஜூன் 5ல் தொடக்கம்

டி.என்.பி.எல்., கிரிக்கெட் ஜூன் 5ல் தொடக்கம்

சேலம் :தமிழ்நாடு பிரீமியர் லீக்(டி.என்.பி.எல்.,) கிரிக்கெட், 9வது சீசன் போட்டிகள், கோவையில் வரும் ஜூன், 5ல் தொடங்க உள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் பங்கேற்க உள்ளன.கோவை ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில், ஜூன், 5 முதல், 12 வரை; சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் ஜூன், 13 முதல் 20; திருநெல்வேலி சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் ஜூன், 21 முதல், 26; பிளே ஆப், இறுதிப்போட்டி, ஜூலை, 1 முதல், 6 வரை திண்டுக்கல் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடக்க உள்ளது. இதில், 6 நாட்கள், இரு போட்டிகள் நடக்க உள்ளன. முதல் போட்டி மதியம், 3:15க்கும், இரண்டாவது போட்டி இரவு, 7:15க்கும் தொடங்கும். இந்த சீசனில் அதிகபட்ச தொகைக்கு, எம்.முகமதுவை, 18.8 லட்சம் ரூபாய்க்கு, சேலம் ஸ்பார்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ