மேலும் செய்திகள்
696 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது
05-Sep-2024
ஓமலுார்: சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர் சோதனைச்சாவடியில் நேற்று மதியம், 1:00 மணிக்கு தீவட்டிப்பட்டி போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஹூண்டாய் காரை நிறுத்தி சோதனை செய்ததில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், 225 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடிய நிலையில், மற்றொருவர் சிக்கினார். விசாரணையில் அவர், ராஜஸ்தானை சேர்ந்த சகன்லால், 34, என்பதும், பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு புகையிலை கடத்தி வந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், காருடன் பறிமுதல் செய்து, தப்பி ஓடியவரை தேடுகின்றனர்.
05-Sep-2024