இன்று திருக்குட நன்னீராட்டு விழா
மேட்டூர்: மேட்டூர், நவப்பட்டி ஊராட்சி கருங்கரடு, திருக்கயிலாயபுரத்தில் உமைய பார்வதி, திருக்கயிலாயநாதர் சிவன்குடில் கட்டப்பட்டுள்-ளது. அதன் திருக்குட நன்னீராட்டு விழாவுக்கு, கடந்த, 2ல் கால்-கோள்விழா நடந்தது. இன்று காலை, 5:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மூலமூர்த்திகளுக்கு காப்பு அணிவித்தல், இரண்டாம் கால வேள்வி, 8:30க்கு, விமான திருக்குட நன்னீராட்டு, 8:45க்கு மூலமூர்த்திகள் திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.