உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் மழையை ரசித்தபடிசுற்றுலா பயணியர் படகு சவாரி

ஏற்காட்டில் மழையை ரசித்தபடிசுற்றுலா பயணியர் படகு சவாரி

ஏற்காடு:கோடை விடுமுறையால் ஏற்காட்டுக்கு சில நாட்களாக தொடர்ந்து சுற்றுலா பயணியர் வந்தபடி உள்ளனர். நேற்றும் ஏராளமானோர் குவிந்தனர். மதியம், 3:05 மணிக்கு, சாரல் மழை பெய்யத்தொடங்கி, 4:20 மணி வரை கொட்டியது. இதனால் சுற்றுலா பயணியர், மழையில் நனைந்தபடி ஏற்காட்டை சுற்றி பார்த்தனர். மழையின்போது படகு இல்லத்தில் பெடல், துடுப்பு படகுகள் இயக்கம் நிறுத்தப்பட்டு, மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால் மழையில் நனைந்தபடியே நீண்ட நேரம் காத்திருந்து மோட்டார் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை