ஆணைவாரிக்கு நீர்வரத்து சுற்றுலா பயணியர் ஜாலி
ஆத்துார், ஆத்துார், கல்லாநத்தம் ஊராட்சி முட்டல் மலை கிராமம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்குள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். கடந்த ஜூன் முதல், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்ததோடு, ஜூலையில் வரத்து இல்லாததால், சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர். சில நாட்களாக கல்வராயன்மலையில் பெய்து வரும் மழையால், இரு நாட்களாக, நீர்வீழ்ச்சியில் சீரான அளவில் தண்ணீர் வருகிறது. இதனால் சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர்.