உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்

ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். அவர்கள் அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பொட்டானிக்கல் கார்டன், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் ஆகிய இடங்களை குடும்பத்துடன் கண்டு களித்தனர்.தொடர்ந்து படகு இல்லத்துக்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மாலையில் சாரல் மழை பெய்ததால், ஏற்காடு, 'குளுகுளு'வென மாறியது. இதனால் சுற்றுலா பயணியர், சாரல் மழையில் நனைந்தபடி, ஏற்காட்டை ரசித்தனர்.17,533 பேர் ரசிப்புஅதேபோல் மேட்டூரில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி யாற்றில் நீராடி அணை பூங்காவை பார்வையிட்டனர். ஒரே நாளில், 17,533 சுற்றுலா பயணியர் பூங்காவை பார்வையிட்டனர். மொபைல் கட்டணம், பவளவிழா கோபுரம் லிப்ட் கட்டணம் என, அணை மற்றும் பூங்காவை சுற்றுலா பயணியர் பார்வையிட்டதன் மூலம் நுழைவு கட்டணமாக, 2,67,440 ரூபாய் கட்டணம் வசூலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !