உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அடிப்படை வசதி இல்லை சுற்றுலா பயணியர் அவதி

அடிப்படை வசதி இல்லை சுற்றுலா பயணியர் அவதி

ஏற்காடு: ஏற்காடு வரும் சுற்றுலா பயணியர், ஒண்டிக்கடை ரவுண்டானா அருகே தோட்டக்கலை துறை வசமுள்ள அண்ணா பூங்காவை சுற்-றிப்பார்த்து மகிழ்வர். அங்கு நுழைவு கட்டணமாக பெரியவர்க-ளுக்கு, 40, சிறுவர்களுக்கு, 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பூங்காவில் இருந்த கழிப்பறை கட்டடம் சேதம் அடைந்ததால், கடந்த ஏப்ரலில் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து புது கழிப்-பறை கட்டும் பணி தொடங்கியது. சுற்றுலா பயணியரின் பயன்-பாட்டுக்கு தற்காலிக கழிப்பறை வைக்கப்பட்டிருந்தது.ஆனால் கழிப்பறை கட்டுமான பணி மந்த கதியில் நடப்பதால், இதுவரை, 50 சதவீத பணி மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தற்காலிக கழிப்பறையும் அகற்றிவிட்டனர். நுழைவு கட்டணம் வசூலிக்கும் இடத்தில், 'கழிப்பறை வசதி இல்லை. பணி நடந்து வருகிறது' என எழுதி ஒட்டப்பட்டுள்ளது. தவிர அங்கு குடிநீர் வசதியும் இல்லை. இதனால் பூங்கா நிர்-வாகம், 10 மாதங்களாக நடந்து வரும் கழிப்பறை கட்டுமான பணியை விரைந்து முடிப்பதோடு, குடிநீர் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை