வணிகர் சங்கத்தினர் கடை அடைப்பு போராட்டம் 4 மாவட்டங்களில் ரூ.300 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
சேலம்: ''சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடைகள் அடைப்பால், 250 முதல், 300 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டது,'' என, சேலம் மாநகர அனைத்து வணிகர் சங்க பொதுச்செயலர் ஜெயசீலன் கூறினார்.வணிக நிறுவன கட்டடங்களின் வாடகை மீதான, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெறக்கோரி, சேலத்தில் பல்வேறு வணிகர் சங்கத்தினர், நேற்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் செவ்-வாய்ப்பேட்டை பிரதான சாலை, லாங்லி ரோடு, கோட்டையின் ஹபீப் தெரு, லீபஜார் உள்ளிட்ட வர்த்தக இடங்கள், ஆட்கள் நட-மாட்டமின்றி வெறிச்சோடின. மளிகை உள்ளிட்ட பொருட்கள் வாங்க வந்த சிலர், ஏமாற்றத்துடன் திரும்பினர்.குறிப்பாக லீபஜார் வர்த்தக சங்கத்தினர், அரிசி ஆலை உரிமை-யாளர்கள், அரிசி உணவு பொருட்கள் மொத்த வியாபாரிகள், சேகோ - ஸ்டார்ச் வியாபாரிகள், இரும்பு ஹார்டுவேர் பெயின்ட் -வியாபாரிகள், எண்ணெய் வித்து, மளிகை வியாபாரிகள் உள்பட பல்வேறு வணிகர் சங்கத்தினர், போராட்டத்தில் பங்கேற்றனர்.இதுகுறித்து, சேலம் மாநகர அனைத்து வணிகர் சங்க பொதுச்-செயலர் ஜெயசீலன் கூறியதாவது:கடை வாடகை மீதான, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும். தவிர சேலம் மாநகராட்சி, வணிக கட்ட-டத்தின் மீதான சொத்து வரி, குப்பை வரியை பலமடங்கு உயர்த்-தியுள்ளது. இந்த வரியை குறைக்கக்கோரி, வணிகர்கள் சார்பில் ஒருநாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இப்படி-பட்ட வரி அமைப்பு, வணிகர்கள், வணிகத்தை நசுக்கிக்கொண்டி-ருக்கிறது. அரசை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை. எங்-களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக நடத்-தியுள்ளோம். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்-டங்களில் கடைகள் அடைப்பால், 250 முதல், 300 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.அரிசி ஆலைகள் சேலம் மாவட்டம் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, வீர-கனுார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 60க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. அதன் உரிமையாளர்கள், ஜி.எஸ்.டி., கவுன்சில் தீர்மானத்தை முழுமையாக நீக்க வலியுறுத்தி, நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரவை பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. தவிர மொத்த அரிசி வியாபாரி-களும் கடைகளை மூடியிருந்தனர்.இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க மாநில செயலர் பரணிதரன் கூறியதாவது:தமிழகம் முழுதும், 2,000க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. அங்கு நெல் அரவை செய்து, அரிசியாக விற்-கப்படுகின்றன. நிறுவனங்களுக்கான கட்டடம், குடோன்களின் வாடகை மீது, ஜி.எஸ்.டி., கவுன்சில், 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதித்துள்ள அறிவிப்பை திரும்ப பெறவேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கவே, தமிழகம் முழுதும் ஒரு நாள் மட்டும் முழு நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்-டுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் அரிசி ஆலைகள் இயங்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.