உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுற்றுலா பயணியரால் வியாபாரிகள் மகிழ்ச்சி

சுற்றுலா பயணியரால் வியாபாரிகள் மகிழ்ச்சி

ஏற்காடு: பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறையால், ஏற்காட்டில் நேற்று முன்தினம் முதலே சுற்றுலா பயணியர் வர்ததொடங்கினர். ஞாயிறான நேற்று, ஏராளமானோர் ஏற்காடு வந்தனர். அவர்கள், பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். இதனால் சாலையோர கடைகள், உணவகங்கள், பழ கடைகளில் வியாபாரம் அமோகமாக நடந்தது. சில நாட்களாக சரியாக வியாபாரமின்றி இருந்த நிலையில் நேற்று வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்ததால், மகிழ்ச்சி அடைந்தனர்.அதேபோல் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி படகு துறையில் ஏரா-ளமானோர் குவிந்தனர். அவர்கள், படகு மூலம் பயணித்து, விடு-முறை நாளை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ